பயணங்கள்-கூர்ப்பு

ரோட் என்டது வெறும் வாகனங்கள் மட்டும் ஓடுர பாதை இல்ல அது மனிதர்களின் வேறுபட்ட மன உணர்ச்சிகள் எல்லையே இல்லாது சஞ்ஞாரிக்கிற பாதை.

சந்தோசம்,கவலை,பயம்,கோபம்,அன்பு,காதல்,போட்டி,பொறாமை,நகைச்சுவை என பல்வேறு மனவெழுச்சிகள் மனிதமனத்தினூடு ரோட் பயணத்தின் போது நிலைமாற்றங்களோடு பயணப்படுகின்றன.

நாம சின்ன வயசில பயணம் செய்யக்க நாம போகபோற இடத்தை பற்றியும் அங்கே காணப்போகும் சொந்தங்களை பற்றிய ஆவல் இருக்கும்.அது பயணப்படும் போது சேர வேண்டிய இடத்தை நேரத்துடன் அடைய வேண்டும் என்ட எண்ணத்தையும் சந்தோசமான மனநிலையையும் ஏற்படுத்துகிறது.இதுவே அங்கே இருந்து மீண்டும் பழைய இடத்தை அடையும் போது தாமதமாக அடையவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி காணப்படும்.

இந்த மன உணர்ச்சிகள் வயதுடன் பரிணாமம் அடைகின்றன.வயதுடன் பயணங்கள் உணர்ச்சிகளற்ற சாதாரண பயணங்கள் ஆகின்றன.